மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுபான்மை மக்களுக்கு சட்டத்தில் பாரபட்சம் : நினைவிடம் அகற்றப்பட்டமை தொடர்பில் மனோ விசனம்!

- Advertisement -

இலங்கை அரசாங்கம், சிறுபான்மை மக்களுக்கு சட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், குறித்த  நினைவிடம்  அகற்றப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

 

 

இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தில், குறித்த நினைவிடம் அகற்றப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவிக்கின்றார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

“நினைவிடத்தை அகற்றுவது என்பது சாதாரண ஒருவரினால் மேற்கொள்ள முடியாது.பல்கலைக்கழகத்திற்கு என ஒரு பாதுகாப்பு இருக்கின்றது.அதற்கு என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருப்பார்கள்.

இவ்வாறு இருக்கும் போது, உபகரணங்களை எடுத்துச் சென்று ஒருவர் இருவருக்கு இதனை இடித்தழிக்க முடியாது.இதனால் அரச கட்டமைப்பின் ஒரு குழுவினர், அல்லது அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களே இதனை மேற்கொண்டிடுப்பார்கள் என பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இதனை யாரு செய்தார்கள், எதற்காக செய்தார்கள் போன்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டும்.

அது தவறு எனில், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்”

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடம்  அகற்றப்பட்டமை அநகாரிக செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த தூபியை  முழுமையாக அழிக்க வேண்டுமென்ற தீய நோக்கம், ஏன் ஏற்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனவாதிகளையும், கடும்போக்காளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே தவிர, வேறு எந்தக் காரணமும் இதில் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணக்கம் என்ற போர்வையில், தமிழர்களையும் , முஸ்லிம்களையும் தொடர்ந்தும் வஞ்சம் தீர்ப்பதிலேயே, அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு அனைத்து முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ரிஷாட் பதியுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு, தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை இன்றையதினம்  சந்தித்தன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சித்தார்த்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நினைவுத்தூபி அகற்றப்பட்ட விடயம் தொடர்பில்,  தனக்கு பாரிய அலுத்தம் இருந்ததாகவும், அதற்கான நிரூபம் தன்னிடம் இருப்பதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தாரத்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமது உறவுகளை நினைவு கூறும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்கின்றார்.

அத்துடன், குறித்த விடயத்திற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வடக்கும் கிழக்கும் இணைய முடியாது என்பதையே, இந்த விடயம் வெளிப்படுத்துவதாக, முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துதல் மற்றும் நினைவிடங்களைப் பாதுகாப்பது என்பன, பொதுவான விடயம் என்ற போதிலும், அதனை மீறி நினைத்தூபி அகற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், தமது ஏனைய நினைவிடங்கள், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நினைவித்தூபி அகற்றப்பட்டமைக்கு எதிராக, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இதன்படி, குறித்த  இடத்திற்கு தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும்  பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என பலரும் வருகைதந்து தமது ஆதரவினை வழங்கியுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நினைவிடம் அகற்றப்பட்டமையானது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இடத்தில் மீண்டும் நினைவிடமொன்றை அமைப்பதற்கு. பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் என  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம்,  நேற்று முன்தினம் இரவு (08) அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் அமைக்க்பட்டிருந்த நினைவிடமொன்றே இவ்வாறு அகற்றப்பட்டது.

எனினும், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியின் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு முன்னைய அரசாங்க காலப்பகுதியில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதுடன், நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில்,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நினைவிடத்தை அகற்றும் நடவடிக்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைய தினத்திற்குள் கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியம் – சுகாதார அமைச்சு

நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்ததும், அதனை உடனடியாக வழங்குவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி!

தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. பாகிஸ்தான் -கராச்சியில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி, இன்றைய...

நாளை முதல் FACEBOOK வழங்கவுள்ள புதிய வசதி – இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில் சுமார் 6 தசம் 5 மில்லியன் FACEBOOK பயனாளர்கள் காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல்...

நாட்டின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 709...

பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளம்!

மாத்தறை மாவட்டத்தில் - பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12 முதியோர்களுக்கும், முதியோர் இல்லத்தில்...

Developed by: SEOGlitz