மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆட்டத்தை இடைநிறுத்தியது அவுஸ்திரேலிய அணி!

- Advertisement -

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இன்றைய போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 338 ஓட்டங்களையும், இந்திய அணி 244 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஆறு விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்த நிலையில், நாளை தொடரின் இறுதிநாளில், இந்திய அணி 309 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன…!

நாட்டில் மேலும் சில பகுதிகளில்  இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல்  தளர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி  கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு  கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட  கல்முனை 1 C...

பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை

சாதாரணதர  மாணவர்களின் கல்விசெயற்பாடுகளுக்காக  மேல் மாகாணத்தில் இன்று முதல்  பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா   அதிபர் தெரிவித்துள்ளார். பாடசாலை வாகனசேவைகளில்...

ரயில்சேவைகள் இன்றுமுதல் வழமையான முறையில்…

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ரயில்சேவைகள்  இன்றுமுதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 390  ரயில்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ...

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்…!

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை...

மேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

Developed by: SEOGlitz