மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

- Advertisement -

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகளை நாளையதினம் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் பாடசாலை வளாகங்களில் நுளம்புகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 247 டெங்கு நேயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 டெங்கு நேயாளர்கள் பதிவாகியுள்ளகாகவும் இதுவே உயர்ந்த எண்ணிக்கையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தின் சில பாடசாலைகள் ஆரம்பிக்கபட மாட்டாது என வவுனியா மாவட்டம் அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, வவுனியா மாவட்டத்திலுள்ள 6 பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகள் நேற்றையதினம் முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

MCC உடன்படிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது – சட்டமா அதிபர்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திட முற்பட்ட எம் சி சி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு முரானாணது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலாளருக்கு சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக...

தனது ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அலெக்ஸி நவால்னி கோரிக்கை!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய  அவர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz