மெய்ப்பொருள் காண்பது அறிவு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

- Advertisement -

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், நாட்டின் தென்கிழக்கு பிராந்திய வளிமண்டலத்திற்கு கீழாக ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக, அடுத்து வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், நாட்டின் ஏனைய சில மாகாணங்களில் பிற்பகல் வேளையில், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகவும் காணப்படும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை!

ரஷ்யாவில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்து 38 ஆயிரத்து 690 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவில் கொரோனா தொற்றினால்...

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...

Pfizer கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் Pfizer கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது. இதன்படி பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடுத்துவைக்க்பட்டுள்ள  குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வீடியோ தொழிநுற்பம் ஊடாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் சிலர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் குறித்த இலங்கையர்கள் நாடு  திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி சிங்கப்பூரில் இருந்து...

Developed by: SEOGlitz