மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

- Advertisement -

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதன்படி கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

- Advertisement -

கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்ததாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட வத்தளைப் பொலிஸ் பிரிவின் வெலிகடமுல்ல கிராமசேவையாளர் பிரிவும் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

மேலும், கிரிபத்கொடைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுப்பிட்டிய வடக்கு கிராம சேவையாளர் பிரிவு மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்துவ MC வீடமைப்புத் திட்டமும் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்பத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, பொரள்ளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோத்தமிபுர வீட்டுத் திட்டத்தின் 24 மற்றும் 78 ஆகிய தோட்டப் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரயில்சேவைகள் இன்றுமுதல் வழமையான முறையில்…

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ரயில்சேவைகள்  இன்றுமுதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 390  ரயில்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ...

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்…!

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை...

மேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...

தொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...

Developed by: SEOGlitz