விபத்துக்குள்ளான இந்தோனேஷியாவின் The Sriwijaya Air எனும் பயணிகள் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விமானம் கடற்பகுதியில் வீழ்ந்த விமானத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதன் கறுப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, விமானம் விபத்துக்கு உள்ளானமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட Boeing737 ரகத்தைச் சேர்ந்த The Sriwijaya Air பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் அடிக்கும் குறைவான உயரத்தில் பறந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், பின்னர் விபத்துக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.
இந்த விமானத்தில் 50 க்கு மேற்பட்ட பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் உள்ளடங்களாக 62 பேர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.