மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 300 பேர் இன்று அடையாளங் காணப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய நபர்களே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 140 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், அவர்களில் 44 ஆயிரத்து 382 பேர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அடையாளங் காணப்பட்டவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 325 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மேலும் 487 இன்று குணமடைந்த நிலையில், தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நேற்றைய தினம் 17 ஆயிரத்து 217 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 27 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்...

வவுனியாவில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சுகாதார பிரிவினரினால்...

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம்...

இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் : நான்காம் நாள் ஆட்டம்..

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny கைது!

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த ஆண்டு விஷத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை...

Developed by: SEOGlitz