- Advertisement -
சிறிய மற்றும் பாரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர்கள் குழுவினருடன் நேற்றைய தினம் காணொளி மூலமான சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு பிரதமர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சந்திப்பின் போது முட்டை உற்பத்தியாளர்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதன்படி முட்டை உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் வசதிகள் தொடர்பிலும் பிரதமர் இதன்போது அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
இதேவேளை சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளமை குறித்தும் இதன்போது பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -