மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் : அங்கஜன் கண்டனம்!

- Advertisement -

யாழில் நினைவுத் தூபி இடிப்புச் சம்பவத்தில் அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது. ஓர் நினைவுத் தூபியை அழிப்பதென்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறியுள்ளது.

கடந்த கால அரசியல் தலைமைகள் நினைத்திருந்தால் தூபிக்கான அனுமதியை அன்றே பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.

அனுமதி என்ற விடயத்தில் அன்று விடப்பட்ட தவறு இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நினைவுச் சின்னம் இன மத பேதங்களுக்கு அப்பால் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுவான ஒன்று.

நினைவுத்தூபியை இடிக்க வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கல்விச் சமூகத்தால் தெரிவிக்கப்படவில்லை.

அடையாளச் சின்னம் அழிக்கப்பட்ட பின்னரே இவ் விடயம் தொடர்பில் எம்மால் அறிய முடிந்தது. இது தொடர்பில் முன்பாகவே எமக்கு தெரியப்படுத்தியிருந்தால் இன்று அந்த தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் அழிவின்றி இருந்திருக்கும்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து இளைய சமுதாயம் திசை மாறிச் செல்வதனையும், இனங்களுக்கிடையே முரண்பாடுகள் வளர்க்கப்படுவதனையும் அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும்” என குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...

தொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...

நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

Developed by: SEOGlitz