கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை, மேலும் 90 நாட்களுக்கு தடுத்துவைக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட நபர்களுடன் தொடர்பினை வைத்திருந்தாக கூறி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை 18 மாதங்கள் தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.