மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள் !

- Advertisement -

பொது இடங்களில் ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி வர்த்தக நிலையங்கள் மீன்விற்பனை நிலையங்கள் பொதுமக்கள் ஒன்றுகூடும் ஒன்றுகூடும் இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவகையில் ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதேவேளை மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பயணிக்கும் நபர்களுக்கு Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று  முதல் மீண்டும் கடுமையான முறையில்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசியினை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மட்டக்களப்பு – அரசடி பகுதி தனிமைப்படுதலில் – காத்தான்குடியில் சில பகுதிகள் விடுவிப்பு.

காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கபட்டுள்ளன. இதேபோன்று, பண்டாரகம அட்டுலுகம பகுதியின், எபிட்டமுல்ல கிராமசேவகபிரிவு, மற்றும் பமுனுமுல்ல கிராமசேவகபிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ன. அத்துடன், மொணராகலை படல்கும்புர அலுபொத்த பிரதேசமும்...

பாடசாலைகளில் முறையான சுகாதார பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

பெப்ரவரி மாதம்  மேல் மாகாணத்தின் அனைத்து  பாடசாலைகளும்  மீளதிறக்கப்படுவதற்கு முன்பதாக  கடுமையான சுகாதார பாதுகாப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளிலும் 18 பேர் கைது -காரணம் இதோ!

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை...

பசறையில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர். இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி...

கண் வைத்தியசாலையில் 6  பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர்...

Developed by: SEOGlitz