பெரும்போக நெல் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதன் ஆரம்ப நிகழ்வு அம்பாறை, அக்கரைப்பற்று நெல் களஞ்சியப்படுத்தல் சபைத் தொகுதியில் இன்று பிற்பகல் 3.30 இற்கு இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், ஒருகிலோகிராம் தரமான நாட்டரிசி நெல்லை 50 ரூபாவுக்கும், நாட்டரிசியின் ஏனையவற்றை 44 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் தரமான சம்பா அரிசி நெல்லை 52 ரூபாவிற்கும், சம்பா அரிசின் ஏனையவற்றை 46 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நெல் விலைச் சரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய, விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.