நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்
62 வயதுடைய வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவரும், ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரும், மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரும், கொழும்பு 12 ஐச் சேர்ந்த பெண்ணொருவரும், கொழும்பு 14ஐச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவர், பண்டாரகமை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர், காத்தான்குடியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவர் மற்றும் களுத்தறை தெற்குப் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
இதன்படி, கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளது.