நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தபோது, அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவராக, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து, இந்த விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர் சுயமாக முன்வந்து PCR பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.