கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி. கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட வத்தளைப் பொலிஸ் பிரிவின் வெலிகடமுல்ல கிராமசேவையாளர் பிரிவு இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது
மேலும், கிரிபத்கொடைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுப்பிட்டிய வடக்கு கிராம சேவையாளர் பிரிவு மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்துவ MC வீடமைப்புத் திட்டம் இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பொரள்ளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோத்தமிபுர வீட்டுத் திட்டத்தின் 24 மற்றும் 78 ஆகிய தோட்டப் பிரிவுகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் ஏனைய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலானது தொடர்ந்தும் அமுலில் காணப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.