சினிமா துறையினரிடம் இருந்து அறவிடப்படும் பொழுபோக்கு வரியை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசசேவைகள், மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசரி மற்றும் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன ஆகியோரினால், நேற்றைய தினம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, தமக்கு இரண்டு வருட காலத்திற்கு சலுகைகளை வழங்குமாறு, சினிமாத் துறையினரால் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது
இந்த நிலையிலேயே, 2022 ஆம் ஆண்டுவரை, பொழுதுபோக்கு வரியை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டு முதல் சினிமா துறையினரிடம் நூற்றுக்கு 7.5 வீதம் வரி அறவிடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையான காலப்பகுதியில், 5 முதல் 25 வீதம் வரை, உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் பொழுதுபோக்கு வரி அறவிடப்பட்டு வந்தது.
எனினும், தற்போதைய புதிய தீர்மானத்தின் பிரகாரம், 2023 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே அளவு வரி அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது