காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும 18ம் திகதியே தனிமைப்படுத்தல் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் எமது கெப்பிடல் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில், கடந்த 31 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை, நாளையுடன் நிறைவடையவிருந்தது.
இந்த நிலையிலேயே, சுகாதார பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அதனை 18 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த பகுதிகளில் நாளாந்தம் 100 முதல் 150 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் மேலும் குறிப்பிட்டார்.