அனுராதபுர பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில், பல்வேறு சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவர் இல்லத்தில், 57 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இதனையடுத்து, சிறுவர் இல்லத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, இன்று காலை அனுராதபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.