பொலநறுவை கல்லுல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் சிலாபம் மாதம்பை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பொலநறுவை கல்லுல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கைதிகள் 5 பேர் இன்று காலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரி இருந்து நிலையில், ஒருவர் சிலாபம் மாதம்பை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.