நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபை, தேர்தலை நடாத்த முடியுமா என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படுவது அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபை தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படமாட்டாது எனினும் தேவையற்ற முறையில் அதனை கடந்த முறை செய்திருப்பதால் மீண்டும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.
அதனை மீளத்திருத்தி நிறைவேற்றுவதற்காக மறுபுறத்தில் இதுபோன்ற நிலைமைகளில் இலங்கை இந்திய திட்டத்தில் மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நெருக்கடியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியிருந்தோம். ஆனால் தற்போது கட்டுப்பாடுகளை மீறி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே எந்த முறையில் தேர்தலை நடத்துவது மற்றும் மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழ்நிலையில் நடத்த முடியுமா என்பது தொடர்பில் சிந்தித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படுவது அவசியமாகும் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என