மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச சொத்துக்களை விற்பனை செய்வதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது : அமைச்சர் அநுர!

- Advertisement -

அரச சொத்துக்களை விற்பனை செய்வதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என  அமைச்சர் அநுர பிரியதர்ஷனயாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“கிராமத்துடன் பேச்சு என்கிற வேலைத்திட்டத்தில் கிராம மக்களின் ஒத்துழைப்பு, ஆலோசனைப் பெற்று வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொண்டு கிராமங்களைக் கட்டியெழுப்புவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென  பிரதேச, கிராமிய, மாவட்ட ரீதியில்  குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.  கிராமங்களிலுள்ள ஒரு இலட்சம் வீதிகள் மற்றும் பல்வேறு  அபிவிருத்திகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

சொத்துக்களை விற்பனை செய்வதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது   நட்டம் இன்றி இலாபம் ஈட்டுவதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு பெறப்படுகின்றது.

அதனை விற்பனை செய்வதாக திரிபுபடுத்தி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பலர்  முயற்சிக்கின்றனர்.

அவற்றில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அமைச்சர் அநுர பிரியதர்ஷனயாப்பா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..!

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

Developed by: SEOGlitz