மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்ற அனுமதி : ஊடகங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

அடுத்த மாதம் முதல் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்ற அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஊடகங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனினும் ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து இரண்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதுடன், அவர்களில் ஒருவர் மட்டுமே செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததையடுத்து நாடாளுமன்ற அமர்வுகளில் செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான்...

7 விக்கெட்டுகளினால் வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்ட Multan Sultans அணி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 7 ஆவது போட்டியில், Multan Sultans அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. Lahore Qalandars மற்றும் Multan Sultans அணிகளுக்கு இடையிலான 7 ஆவது போட்டி நேற்று ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கையை ஆராயும் குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்கும்: பிரசன்ன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் இறுதி அறிக்கையை ஆராயும் விசேட குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்குமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

மத்தியவங்கி முறிகல் மோசடி – பிரதான சூத்திரதாரியின்றி வழக்கை கொண்டுசெல்ல சட்டமா அதிபர் தயார் – அலிசப்ரி தெரிவிப்பு!

மத்தியவங்கி முறிகல் மோசடியின் பிரதான சூத்திரதாரியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மத்தியவங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இல்லாத நிலையில் வழக்கை கொண்டுசெல்வதற்கு சட்டமா அதிபர் தயாராக உள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மத்தியவங்கி முறிகல் மோசடி...

Developed by: SEOGlitz