மத்தளை சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த யுக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்தளை சர்வதேச விமான நிலையம் ஊடாக இரண்டு யுக்ரேனிய சுற்றுலா குழுக்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளன.
நேற்று முன்தினம் வருகை தந்த குழுவில் 185 பேரும், நேற்றைய தினம் வருகை தந்த குழுவில் 204 பேரும் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த சுற்றுலா குழுவினர் உள்நாட்டு சுகாதார அதிகாரிகளினால் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்படி, குறித்த மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சுற்றுலா குழுவினர் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.