அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் தொடர் Melbourne கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 70 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் Ajinkya Rahane தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.