கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆரியா ராஜேந்திரனிற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்திலே இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆரியா ராஜேந்திரனின் வெற்றியானது இளைஞர்கள் மற்றும் பெண்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தின் ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் முதல் இளம் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.