மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவிற்குள் பிரவேசிக்க பரிசோதனை சான்றிதழ் அவசியம் – விசேட கூட்டத்தில் ஆலோசனை!

- Advertisement -

வவுனியா மாவட்டத்தின் கொரோனா தொற்று நிலைமைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த விசேட கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் காதார் மஸ்தான், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே,  வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மகேந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொரறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு, வவுனியா கமநல திணைக்கள பணிப்பாளர் இ.விஜயகுமார், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களுடன், வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.P.M.A.அசங்க காஞ்சனகுமார, வவுனியா நகரசபை தலைவர்  இ.கௌதமன்  உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், முச்சக்கரவண்டி  சங்க உறுப்பினர்கள், இலங்கை போக்குவதத்துச்சபை ஊழியர்களின், சுகாதார பிரிவினர், வர்த்தகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் வெளிமாவட்டத்திலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் பி.சீ.ஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியமாக்கப்படுவதுடன், விடுமுறையில் ஊர்களுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பி.சி.ஆர் மேற்கொள்ளுதல், கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகளுக்கு ஒரே சாரதி, நடத்துனர்களை சேவையில் ஈடுபடுத்துதல், முகக்கவசம் கட்டயாப்படுத்துதல் போன்ற பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக Saliya Pieris தெரிவு!

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி Saliya Pieris தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 85 ஆவது தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்படி, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான, Kuvera de...

கிழக்கின் காடுகளை ஊடறுக்க போகும் விசேட இராணுவப்படை..!

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காடழிப்பு நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட படையணியொன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட...

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடை 190 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவின் ஆதரவை கோரும் கூட்டமைப்பு…!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா ஊடகங்களுக்கு இவ்வாறு...

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பரிந்துரைகள் அவசியம் – அங்கஜன் கோரிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மத்திய செயற்குழுக்கூட்டத்தில் உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Developed by: SEOGlitz