மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

- Advertisement -

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 10 விமானங்கள் ஊடாக 186 பயணிகள் தமது பயண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இவர்கள் குறித்த பயண நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இதற்கமைய, குறித்த காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 91 இலங்கையர்கள் 7 விமானங்கள் ஊடக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 84 பேரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 7 பேரும்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் விமான நிலையத்திலே பி.சி.ஆர். பரிசோதானை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 95 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை: துஷார இந்துனில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே,...

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

Developed by: SEOGlitz