மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் சடுதியாக அதிகரித்துள்ள கொரோனா தொற்று!

- Advertisement -

நாட்டில் நேற்றைதினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் 549 கொரோனா தொற்றாளர்கள் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட நிலையில்,  அதில்  237  பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், தெமட்டகொடை பகுதியில் 121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிருலப்பனை பகுதியில் 23 பேரும், வெள்ளவத்தை பகுதியில் 18 பேரும், மருதானை பகுதியில் 14 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொள்ளுபிட்டி பகுதியில் 9 பேருக்கும், பம்பலபிட்டி பகுதியில் 8 பேருக்கும், பொறளை பகுதியில் 6 பேருக்கும், கிராண்பாஸ் பகுதியில் 4 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 124 பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது

மேலும், கண்டி மாவட்டத்தில் 44 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 39 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 19 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 12 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும்,  திருகோணமலை, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 37 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாதொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 603 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 33 ஆயிரத்து 221 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 188  பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாடு முழுவதும் முப்படையினரால் நடாத்தப்படும் 74 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 855 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் 12 இலட்சத்து 4 ஆயிரத்து 350 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz