மெய்ப்பொருள் காண்பது அறிவு

உடல்களை தகனம் செய்யும் விவகாரம் அரசியல் சார்ந்தது அல்ல : சாகர காரியவசம்!

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் உடல்களை தகனம் செய்யும் விவகாரமானது, அரசியல்சார்ந்த விடயம் கிடையாது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்காகவே எமக்கு மக்கள் வாக்களித்தனர். பலருக்கு மறந்திருந்தாலும் ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.

இந்த நாட்டில் சில மாகாணங்களில் சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை. சில மாகாணங்களில் மோட்டார் சைக்களில் செல்லும்போது தலைக்கவசம் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டது.

சட்டம் செயற்படவில்லை. நீதிமன்றங்களுக்கு அழுத்தம்கொடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுதல், பொய்சாட்சிகளை ஏற்படுத்தி சிலரை சிறைதள்ளி மரண தண்டனை வழங்கிய சந்தர்ப்பங்களும் இருந்தன.

இன்று அவை இல்லை. இன்று நாட்டில் பொலிஸ் ஊடாக ஒரே சட்டம்தான் அமுலில் உள்ளது. சூழ்ச்சி செய்து சிலரை மரண தண்டனை வழங்குகின்ற கலாசாரம் இல்லை.

தொடர்ந்தும் அந்த வியடத்தை விருத்தி செய்ய தேவையுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கான நடவடிக்கையை நீதியமைச்சு நடத்தி வருகிறது.

அத்துடன் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுகின்ற விடயத்தை தேசியரீதியிலான பிரச்சினையை அரசியல் மயப்படுத்தக்கூடாது. கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை தகனம் செய்வதா புதைப்பதா என்பது அரசியல் ரீதியாய தீர்மானிக்க முடியாது.

சுகாதாரப்பிரிவினரே அதற்கான முடிவினை எடுக்க வேண்டும். நிபுணர்களிடம் இதுகுறித்த முடிவுகளை எடுக்க கையளித்திருக்கின்றோம். இந்த முடிவுகள் அரசியல் தீர்மானங்கள் அல்ல” என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக Saliya Pieris தெரிவு!

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி Saliya Pieris தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 85 ஆவது தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்படி, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான, Kuvera de...

கிழக்கின் காடுகளை ஊடறுக்க போகும் விசேட இராணுவப்படை..!

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காடழிப்பு நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட படையணியொன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட...

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடை 190 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவின் ஆதரவை கோரும் கூட்டமைப்பு…!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா ஊடகங்களுக்கு இவ்வாறு...

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பரிந்துரைகள் அவசியம் – அங்கஜன் கோரிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மத்திய செயற்குழுக்கூட்டத்தில் உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Developed by: SEOGlitz