கல்முனையில் கொரோனா தொற்றாளர்களை அடையாளங் கண்டு கொள்ளும் நோக்கில், நேற்று இரவு முதல் விசேட கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர எல்லைப் பகுதியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, நேற்றிரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், தற்காலிக சிகிச்சை கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு, கொவிட் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
இந்த நிலையில், நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாறான பரிசோதனை நடவடிக்கைகள், மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.