மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் ஆலய உற்சவத்தில் பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

- Advertisement -

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தினாலேயே ஆலய திருவிழாவில் பங்குபற்றிய பலர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயம் மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின்போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், ஆலயத்தில் பூசைகள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதுடன், பக்தர்கள் ஆலயத்தினுள் செல்லாமல் வெளியே, ஆலய வளாகத்தில் நின்று வழிபாட்டில் ஈடுபட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலய வளாகத்திலும் முகப்பிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பனர்கள் கட்டப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்த நிலையிலும் பக்தர்கள் சிலர் குறித்த அவற்றினை மீறியுள்ளதாக பொன்னாலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ச.சர்மிலன் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தடுப்பு செயலணியால், ஆலயத் திருவிழாக்களின்போது 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களின் பெயர்கள் நுழைவாயிலில் வைத்து பதிவுசெய்யப்பட்டு 50 பேர் மட்டும் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், திருவடிநிலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தின்போது பல பக்தர்கள் குறித்த கட்டுப்பாடுகளை மீறியிருந்ததாக பொன்னாலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேலும் குறிப்பிட்டார்.

யாழில் ஆலய உற்சவத்தில் பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! 1 யாழில் ஆலய உற்சவத்தில் பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! 2 யாழில் ஆலய உற்சவத்தில் பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! 3 யாழில் ஆலய உற்சவத்தில் பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நெல் கொள்வனவின்போது ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, எதிர்வரும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை  முழுமையாக ஒப்படைப்பதற்கு  சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம்...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

Developed by: SEOGlitz