மட்டக்களப்பு நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட rapid antigen பரிசோதனையில் இதுவரையில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் 553 பேருக்கு இன்று rapid antigen பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்பிரகாரம் 26 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் மூவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜீவராணி கெப்பிட்டல் செய்திப்பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.