தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டு ஜனாதிபதி Cyril Ramaphosa இவ்வாறு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, தென்னாபிரிக்காவில் இன்று முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணிமுதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் அனுமதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கும், ஒன்று கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், மதுபான விற்பனைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு 8 மணியுடன் தென்னாபிரிக்காவின் அனைத்து விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள் மற்றும் ஏனைய இடங்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் பாதுகாப்பு முகக்கவசம் அணியத் தவறும் நபர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களின் சடுதியான அதிகரிப்பே குறித்த எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு காரணமென தென்னாபிரிக்க ஜனாதிபதி Cyril Ramaphosa சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தென்னாபிரிக்காவில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமெனவும் ஜனாதிபதி Cyril Ramaphosa குறிப்பிட்டுள்ளார்.