மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டமைப்பில் சர்ச்சை – மாவையை சாடுகிறார் சுமந்திரன்

- Advertisement -

யாழ் மாநகர சபைக்கான வேட்பாளராக இ.ஆனோல்ட் மீண்டும் களமிறக்கப்பட்டமை ஜனநாயக விரோத செயலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்கு, அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம், இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர முதல்வர் இ. ஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இந்த நிலையில், வரவு செலவுத்திட்டம் தோல்வியுற்றால் இராஜினாமா செய்ய வேண்டியது ஜனநாயக விழுமியம் மாத்திரமன்றி,  ஜனநாயக மரபாகவும் காணப்படுவதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த மரபு பின்பற்றப்படாத காரணத்தால்,  சட்டத்தில் திருத்தங்கள்  செய்யப்பட்டு இராஜிணாமா செய்தவராக கருத வேண்டும் என,  சட்டத்தின் தேவைப்பாடாக ஏற்படுத்தப்பட்டதாக, ஜனாதிபதி சட்டத்தரணியான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், யாழ் மாநகர சபைக்கான வேட்பாளராக இ.ஆனோல்ட் மீண்டும் களமிறக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் எனவும்,  ஜனநாயக விழுமியங்களையும் மீறுகின்ற செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், மாவை சேனாதிராஜாவின் தன்னிச்சையான செயற்பாட்டினாலேயே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான இ.ஆனோல்ட் தோற்கடிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன்படி, முதல்வர் வேட்பாளர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்மொழியப்பட்டிருந்தனர்.

இதற்கமைய, வாக்கெடுப்பில் ஆனல்ட் 20 வாக்குகளையும் மணிவண்ணன் 21 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு – டேம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கொழும்பு – டேம் வீதியில் பயணப் பை ஒன்றில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் என பொலிஸார்...

எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது: காதர் மஸ்தான்!

ஐ. நா மனித உரிமை பேரவையில் ஆதரவு பெறுவதற்காக தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய வளங்களை ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்வதாக   எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய விடயமல்ல அல்ல என...

கொடுத்த வாக்கை மீறி செயற்படும் அரசாங்கம்: இம்ரான் மஹ்ரூப் கருத்து!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தேசிய சொத்துக்கள் ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம் இன்று அதனை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. திருகோணமலை பிரதேசத்தில்...

ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காது: கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிராகரிக்க  இலங்கை எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான குறித்த அறிக்கையை இந்தியா...

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்து குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

Developed by: SEOGlitz