முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய Galle Gladiators அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
Galle Gladiators அணி சார்பில் அதன் தலைவர் ஷய்ட் அப்ரடி அபாரமாக துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில் Jaffna Stallions அணிக்காக ஒலிவியர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேவேளை. 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய Jaffna Stallions அணி 19. 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து இலக்கை மிக இலகுவாக கடந்தது.
Jaffna Stallions அணிக்காக அவிஸ்க்க பெர்னாண்டொ 92 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.