முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 5 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற Dambulla Viiking அணி பந்து வீச தீர்மானித்தது.
இந்த போட்டியில் Dambulla Viiking அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதற்கமைய, இரண்டாவதாக 219 என்ற வெற்றியிழக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் Dambulla Viiking அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.