மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய – அவுஸ்திரேலிய தொடரில் இருந்து David Warner விலகல்!

- Advertisement -

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரின் எதிர்வரும் போட்டிகளில் David Warner விளையாட மாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில், ஏற்பட்ட காயம் காரணமாக David Warner போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில்  அவருக்கு ஓய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து David Warner கடைசி ஒருநாள் சர்வதேச மற்றும் அடுத்த மாதம் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த தொடர்க்க ஆட்டக்காரரான David Warner கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தியாவுடனான ஆட்டத்தில் 83 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி!

வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. வவுனியா,...

பூநகரி பிரதேசத்தில் யுவதி வெட்டிப் படுகொலை : கணவர் கைது!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பூநகரி தெளிகரை பகுதியில் அமைந்துள்ள அவரது...

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஹட்டனில் பாரிய போராட்டம்…!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தயார் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிக்கின்றார். எனினும்,  கூட்டு ஒப்பந்தத்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில்,...

இலங்கை Vs இங்கிலாந்து : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்…!

மினுவங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுப்புதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz