தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டடங்களைப் பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பில் Quinton de Kock 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 19 தசம் 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த வெற்றியிலக்கைக் கடந்தது.
இங்கிலாந்து அணியின் சார்பில், Dawid Malan 55 ஓட்டங்களையும், Eoin Morgan 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் நாயகனாக இங்கிலாந்து அணியின் Dawid Malan தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இங்கிலாந்து அணி 2 க்கு 0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.