லங்கா பிரீமியர் லீக் தொடரின் எதிர்வரும் போட்டிகளில் Oshada Fernando விளையாட மாட்டார் என Dambulla Viking அணி தெரிவித்துள்ளது.
Kandy Tuskers அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், Oshada Fernandoவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் ஒரு வார காலத்துக்கு அவருக்கு ஓய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Kandy Tuskers அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், Dambulla Viking அணி டக்வர்த் லூவிஸ் முறையில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.