நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் 12 குடியிருப்புகள் எரிந்து போயுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 இற்கு இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அயலவர்கள் முயற்சித்து வருகின்ற போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குடியிருப்பாளர்களின் பெரும்பாலான உடமைகள் தீயில் எரிந்து போயுள்ள நிலையில், மீதமுள்ள உடமைகளை மீட்கும் நடவடிக்கையில் குடியிருப்பாளர்கள் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.