மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மூலோபாய பொறிமுறை அவசியம் : இந்திய பாதுகாப்பு ஆலோசகர்!

- Advertisement -

பொருளாதாரத்தை  கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை முன்னிலை வகிக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  மற்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று  இன்று இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, கொரோனா தொற்று காரணமாக இந்திய பிராந்தியத்தின் பல்வேறு  நாடுகள் நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக   தெரிவித்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்,  தொற்று நிலைமைக்கு மத்தியிலும் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,கொவிட்-1 9தொற்று நிலைமைக்கு மத்தியில் நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பாலும் இராஜதந்திர கலந்துரையாடல்களை  காணொளி தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்து வந்த நிலையில், தற்போது அவர்கள் தொழிலை இழந்து நாடு திரும்பியுள்ளமையினால்  அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும்  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதுடன், பொருளாதார மந்த நிலைமைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை  கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை முன்னிலை வகிக்குமாறும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர்  அத்தகைய வீடமைப்புத் திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், இந்த சந்திப்பில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 311 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா...

சீன அரசாங்கத்தினால் அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசிகள்!

இலங்கைக்கு சீன அரசாங்கம் மூன்று இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசியினை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் அவை இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

SAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு!

SAMSUNG GALAXY S21 SERIES: அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு. தற்போது முற்பதிவு செய்து கொள்ள முடியும் WEDNESDAY, 27TH JANUARY 2021, COLOMBO: இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட்...

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் 100 பேர் பலி..!

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சாஹேல் பாலைவனம் அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மாலி ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2012 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு...

தீர்வு இல்லாவிட்டால் சேவையில் இருந்து விலகுவோம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  எதிர்வரும் 9 ஆம் திகதி முதல்  சேவையில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக   தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

Developed by: SEOGlitz