கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஷானி அபேசேகரவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையிலே அவர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் உடல்நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், ஷானி அபேசேகரவை தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.