மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் சூறாவளியாக மாறும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

- Advertisement -

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்வங்காள விரிகுடா மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் அருகிலும் காணப்பட்ட தாழமுக்கம் வலயமானது (LOW PRESSURE AREA) அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் தாழமுக்கமாக (DEPRESSION) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

- Advertisement -

பின்னர் அது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது சூறாவளியாக உருமாறும் சந்தர்ப்பத்தில் இதற்கு Iran  நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட NIVAR எனும் பெயர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை அண்மித்து, எதிர்வரும் 25ஆம் திகதி பகல் அல்லது பிற்பகல் வேளையில் காரைக்கால் – மகாபலிபுரத்திற்கு இடையே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தாக்கம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் எதிர்வரும் 24ஆம் திகதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அரபிக்கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த தாழமுக்கம் ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு இந்திய நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட GATI எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து SOMALIA இன் தென்பகுதியான BINNA  ஊடறுக்கும்  என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz