மெய்ப்பொருள் காண்பது அறிவு

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

- Advertisement -

பண்டாரகம அட்டலுகம பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரொனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என  களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மில்லனிய   பகுதியில் உள்ள தனியார்  நிறுவனம் ஒன்றில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில்  நடாத்திய  பி.சி.ஆர்  பரிசோதனையில் அட்டலுகம  பகுதியில்  வசிக்கும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

- Advertisement -

கொரோனா தொற்று இரண்டாம் நிலை ஏற்பட்டதையடுத்து அடையாளங் காணப்பட்டவர்களாக குறித்த அனைவரும்  பதிவு செய்யப்பட்டனர்.

மேலும்  இதனையடுத்து குறித்த பகுதிகளில் உள்ள  135 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்களுள் 17 பேருக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அட்டலுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  21 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகும பகுதி முடக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிவார் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவார் சூறாவளி, காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 213 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம்...

மேலும் சில இடங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமா திணைக்களத்தின் சமர்ப்பனத்திற்கமைய  இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில்...

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

Developed by: SEOGlitz