மெய்ப்பொருள் காண்பது அறிவு

அலரிமாளிகையில் கொரோனா தொற்று? : பிரதமர் ஊடகப்பிரிவு விசேட அறிவிப்பு!

- Advertisement -

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையில் எந்தவொரு பணியாளருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன் கொரோனா தொற்று காரணமாக அலரிமாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல் வெளியாகியுள்ளதாகவம் பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த தகவலில்   உண்மைத்தன்மை கிடையாது  என   பிரதமர் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் சுகாதார விதிமுறைகளுக்கமைய  பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையின்  நாளாந்த செயற்பாடுகள் எந்தவித தடையும் இன்றி முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது

பிரதமரின் பாதுகாப்பு  பிரிவுடன் தொடர்புடைய  வெளிப்புற பாதுகாப்பு பிரிவினர் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையில் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள்  வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் விசேட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு, உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித பாரபட்சமும் இன்றி...

Developed by: SEOGlitz