மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 479 வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 479 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 69 ஆக உயர்வடைந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், நேற்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 491 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 487 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனையவர்களில் இத்தாலியில் இருந்து வருகை தந்த மூவருக்கும் துருக்கியில் இருந்து வருகை தந்த ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 619 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 829 ஆக காணபபடுகிறது.

இதேவேளை, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்புரிமான்ட் சிறைச்சாலை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை, போகம்பரை சிறைச்சாலை மற்றும் பூஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளைச் சேர்ந்த 629பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்,    இதுவரையான காலப்பகுதியில் கொரோனா  தொற்றில் இருந்து குணமடைந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 200 அதிகரித்துள்ளதாக கொரோனாத் தொற்றை தடுப்பதற்கானதேசிய செயலணி மேலும்  குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நேற்றைய தினம் 12 ஆயிரத்து 95 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதார மேம்பாடு பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரை 7 இலட்சத்து 36 ஆயிரத்து 959 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் விசேட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு, உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித பாரபட்சமும் இன்றி...

Developed by: SEOGlitz