மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!

- Advertisement -

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது.

இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஊடக அமைச்சு சார்ந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களினது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் சேறுபூசும் நடவடிக்கைகள்  கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே   வெகுஜன ஊடகங்களுக்கான  ஒழுங்குபடுத்தல் அவசியம் எனவும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே  ஊடகவியலாளர்களுக்கான  காப்பீட்டுத் திட்டமொன்று விரைவில்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத்.பீ.விஜேவீர தெரிவித்துள்ளார்.

குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  இசுறு தொடாங்கொட  குணதிலக்க ராஜாப்ஷ சாகர  காரியவசம்  ஜயந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz