மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிக மழையுடனான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

- Advertisement -

நாட்டிற்கு தென்கிழக்கு திசையில் வங்காள வரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையானது தாழமுக்க பிரதேசமாக மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக மழையுடனான வானிலை காணப்படுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்துவரும் மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து காணப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புத்தளம் முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதியில் தங்கவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வீடு செல்வதற்கு முன்னர் தனிமைப்படுத்தல்...

பசறையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை கணவரல்ல பிரதேசத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz