மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய  நாளை முதல் விசேட அலுவலக ரயில்கள்  சேவையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக  ரயில்வே திணைக்களம்  தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களம் இன்று  விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி  நாளை  முற்பகல் மற்றும் பிற்பகல் வேளையில் விசேட அலுவலக ரயில்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும் குறித்த ரயில்கள் யாவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி  பிரதான ரயில் மார்க்கங்கள் ஊடாக கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல  ரம்புக்கண  கண்டி  கனேவத்த  மஹவ  ஆகிய பகுதிகளில் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள்  மருதானை, தெமட்டகொட  உப ரயில் நிலையம், களனி, வனவாசல  உப ரயில் நிலையம் ஹொரபே உப ரயில் நிலையம் ராகம, வல்பொல உப ரயில் நிலையம் மற்றும் பட்டுவத்த உப ரயில்நிலையம் ஆகியவற்றில் நிறுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே சிலாபம்  ரயில் மார்க்கத்தில் பயணிக்கும்  ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து  சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய ரயில் நிலையங்கள்  வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மேலும்  குறித்த ரயில்கள்  மருதானை, தெமட்டகொடை உப ரயில் நிலையம் ,களனி, வனவாசல உப ரயில் நிலையம்,  ஹொரபே உப ரயில் நிலையம், ராகம  பேரலந்த உப ரயில் நிலையம்,  குரண, நீர்கொழும்பு  கட்டுவ எப ரயில் நிலையம் ஆகியவற்றில் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களனிவெலி ரயில் மார்க்கத்தில்  கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம, அவிஸ்ஸாவலை,வரை ரயில்கள் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ரயில்கள் மருதானை, பேஸ்லைன் வீதி,  ஆகிய ரயில்நிலையங்களில் நிறுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கரையோர ரயில்மார்க்கங்களில் பயணிக்கும் ரயில்கள்  கொழும்பு கோட்டையில் இருந்து  பாணந்துரை ,   களுத்துறை  வடக்கு ,  அலுத்கம . ஹிக்கடுவ காலி மாத்தறை பெலிஅத்த  ஆகிய ரயில் நிலையங்கள் வரை பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அலரி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இந்தியத் தூதுவர் இந்தியத் தூதுவர் கோபால்...

ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதியில் தங்கவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வீடு செல்வதற்கு முன்னர் தனிமைப்படுத்தல்...

பசறையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை கணவரல்ல பிரதேசத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பிரதேசத்தில்...

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு சென்னை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை...

Developed by: SEOGlitz