மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளை முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

- Advertisement -

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் “மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன”.

சுகாதார விதிமுறைகளுக்கமைய பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர்  மாதம் 4 ஆம் திகதி கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதன் காரணமாக மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திட்டமிட்டவாறு நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது.

இதன்பின்னர் எதிர்வரும் 2 வாரங்களுக்கு இரண்டாம் தவணை விடுமுறை நீடிக்கப்பட்டது.

இந்த  நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் இலங்கை கல்வி அமைச்சு சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கோரியிருந்தது.

இதன்பிரகாரம் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும்  நாளை முதல் திறக்கப்படும் என கடந்த 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே  தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான கற்றல்   நடவடிக்கை தொடர்பிலும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும்  தீர்மானம் எட்டப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

Developed by: SEOGlitz